search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வில்லிவாக்கம் பக்தர்"

    நேபாளம் வெள்ளத்தில் சிக்கிய 23 பேரும் உடுக்க உடை இல்லாமல் 8 நாளாக தவித்து வருவதாக வில்லிவாக்கம் பக்தர் தீனதயாளன் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். #MansarovarYatra #IndiansStrandedInNepal
    சென்னை:

    நேபாளத்தில் தவிக்கும் 23 பேரில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தீனதயாளனும் ஒருவர். இவர் அங்கிருந்தபடியே செல்போனில் அளித்த பேட்டி வருமாறு:-

    நேபாளத்தில் சிமி கோட் பகுதியில் சென்னையை சேர்ந்தவர்கள் ஒரு இடத்தில் தங்கி இருக்கிறோம். கடந்த 5 நாட்களாக இங்கு சாலையோர கடைகளில் ஒரே அறையில் அனைவரும் படுத்துள்ளோம்.



    8 நாட்களுக்கும் மேலாக ஒரே உடையைதான் நாங்கள் அணிந்துள்ளோம். மாற்று உடை கூட எங்களிடம் இல்லை. இந்தியாவை சேர்ந்த சுமார் 100 பேர் இதே போன்று தவித்து வருகிறார்கள். நேபாளத்தில் மோசமான வானிலை காணப்படுகிறது.

    எனவே அங்கிருந்து எங்களை பத்திரமாக பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இதே நிலை நீடித்தால் நாங்கள் மேலும் பாதிப்புக்குள்ளாவோம். எனவே உடனடியாக நாங்கள் இங்கிருந்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே நேபாளத்தில் தவிக்கும் 23 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘நேபாளத்தில் தவிப்பவர்கள் பத்திரமாக உள்ளனர்’’ என்று தெரிவித்தார். #MansarovarYatra #IndiansStrandedInNepal

    ×